ஐ.பி.எல். ஏலம்: யார் யார் எத்தனை கோடிக்கு ஏலம் போயிருக்காங்கனு தெரியுமா?

கொல்கத்தா, டிசம்பர்-19

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் மேற்குவங்கம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

 • மே.இ.தீவுகள் வீரர் எவின் லூயிஸ் விற்கப்படவில்லை, ஆர்.சாய்கிஷோர், நூர் அகமது விற்கப்படவில்லை
 • ஷிம்ரன் ஹெட்மையர் – டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ.7.75 கோடிக்கு விற்பனை
 • 14 வயது ஆப்கான் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய்- ரூ.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது
 • ஆகாஷ் சிங்-ஐ ராஜஸ்தான் அணி 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. கார்த்திக் தியாகியை அதே அணி 1.30 கோடிக்கு வாங்கியுள்ளது.
 • இளம்வீரர் யாஷாஸ்வி ஜைஸ்வாலை ராஜஸ்தான் அணி 2.40 கோடி வாங்கியுள்ளது.
 • விக்கெட் கீப்பர் அனுஷ் ராவத்தை அதே அணியில் 80 லட்சத்துக்கு வாங்கியுள்ளது
 • வருண் சக்கரவர்த்தியை கொல்கத்தா அணி 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது
 • தீபக் ஹுடாவை பஞ்சாப் அணி 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.
 • 19 வயதுக்கு உள்பட்டோருக்கான அணியின் கேப்டன் பிரியன் க்ராக்-ஐ 1.9 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
 • வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை
 • ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரியை டெல்லி அணி 2.4 கோடிக்கு எடுத்துள்ளது
 • இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னியை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
 • தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸை 10 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது
 • சாம் குர்ரானை 5.50 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது
 • ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ்-ஐ கொல்கத்தா அணி 15.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது
 • ஜேசன் ராயை டெல்லி அணி 1.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது
 • இந்திய வீரர் யூசுப் பதானை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
 • கிறிஸ் வோக்ஸ்-ஐ 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது
 • ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்-ஐ பஞ்சாப் அணி 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
 • ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச்-ஐ பெங்களூர் அணி 4.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
 • 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் புஜாராவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
 • 50 லட்சம் ரூபாய் அடிப்படை தொகையாக இருந்த இந்திய வீரர் ஹனுமன் விஹாரியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
 • ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணி ரூ. 3 கோடிக்கு எடுத்துள்ளது.
 • இயான் மோர்கனை கொல்கத்தா அணி 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது
 • மும்பை இந்தியன்ஸ் அணி கிறிஸ் லைன்-ஐ இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது 

அணிகளிடம் உள்ள தொகை விவரம்:

 1. சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ.14.60 கோடி)
 2. மும்பை இந்தியன்ஸ் (ரூ.13.05 கோடி)
 3. டெல்லி கேபிடல்ஸ் (ரூ.27.85 கோடி)
 4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ.35.65 கோடி)
 5. கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ரூ.42.70கோடி)
 6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ.27.90 கோடி)
 7. ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ.28.90 கோடி)
 8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(ரூ.17 கோடி)

எத்தனை வீரர்களை ஒரு அணி ஏலம் எடுக்க முடியும்?:

 1. சென்னை சூப்பர் கிங்ஸ் -5 (3 இந்தியா, 2 வெளிநாடு)
 2. டெல்லி கேப்பிடல்ச் – 11 (6 இந்தியா, 5 வெளிநாடு)
 3. கிங்ஸ் லெவன் பஞ்சாப்- 9 (5 உள்நாடு, 4 வெளிநாடு)
 4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 (7 உள்நாடு, 4 வெளிநாடு)
 5. மும்பை இந்தியன்ஸ் -7 (5 உள்நாடு 2 வெளிநாடு)
 6. ராஜஸ்தான் ராயல்ஸ் – 11 (7 உள்நாடு 4 வெளிநாடு)
 7. ஆர்சிபி – 12 (6 உள்நாடு, 6 வெளிநாடு)
 8. சன்ரைசர்ஸ் – 7 (5 உள்நாடு 2 வெளிநாடு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *