பிரபலங்களின் பட்டியலில் கமல், அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்!!!

டிசம்பர்-19

ஃபோர்ப்ஸ் இதழினின் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல இதழான ஃபோர்ப்ஸ், ஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவற்றினை பிரபலங்களின் ஆண்டு வருமானம், பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்து கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான டாப் 100 பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தாண்டுக்கான பட்டியலில் ரூ.252.72 கோடி வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2018 அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் 2019 செப்டம்பர் 30-ம் தேதி வரை கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 2-ம் இடமும், கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த சல்மான் கான் தற்போது 3-ம் இடமும் பிடித்துள்ளனர். நடிகர் அமித்தாப் பச்சன், கிரிக்கெட் வீரர் தோனி, ஷாருக்கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் தமிழக திரையுலக பிரபலங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் சங்கர், சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், ஆகியோரும் இடம் பிடித்துள்ளர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *