திரைத்துறையினர் அனைவரும் கோழைகள்-கங்கனா ராவத்

ஹைதராபாத், டிசம்பர்-19

குடியுரிமை சட்ட திருத்த மசாதோவை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததால் #ShameonBollywood என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்பட வேண்டும். பாலிவுட்டில் அனைவரும் கோழைகள். அவர்கள் தினமும் 20 முறை கண்ணாடியில் தங்களை பார்த்துக் கொள்வார்கள். ஏதாவது கேட்டால் எங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது, நாங்கள் எதற்காக நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என்பார்கள் என்றார்.

அவர்களின் நடவடிக்கையை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவது மட்டும் அவர்களின் வேலை அல்ல. அவர்கள் மக்களால் உருவாக்கப்பட்டவர்கள். அப்படி இருக்கும் போது மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால் அவர்கள் இந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருப்பது இன்ஸ்டாகிராம் போஸ்ட் போடவும், போதை பார்ட்டிகள் நடத்தவுமா?

திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்கள். அவர்கள் கோழைகள், முதுகெலும்பில்லாதவர்கள். அவர்களை தலைவர்கள் போன்று பார்ப்பதை நிறுத்த வேண்டும். நம் நிஜ முன் மாதிரி யார் என்கிற தெளிவு நமக்கு இருக்க வேண்டும் என கங்கனா ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *