குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை-அமித்ஷா திட்டவட்டம்

மும்பை, டிசம்பர்-18

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு பாறையை போல் உறுதியாக இருக்கிறது. திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் மும்பையில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு பாறையை போல உறுதியாக இருக்கிறது. இதில் சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் இல்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போராட்டத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியுரிமை சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை முன்னெடுக்கின்றன. ராகுல்காந்தி வீர சாவர்க்கராக இருக்க முடியாது. அதற்கு நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். அர்ப்பணிப்பும் தேவை. நாட்டின் தலைநகர் டெல்லியில் அமைதி நிலவுவதை உறுதி செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *