முரசொலி நிலம் பஞ்சமி நிலமா?- மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தவு

சென்னை, டிசம்பர்-17

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா தொடர்பான புகாருக்கு மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க டெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அதிகாரப்பூரவ நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என புகார் எழுந்தது. இதனையடுத்து, பா.ஜ.க. சார்பில் தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் முரசொலியில் நிர்வாக இயக்குநர் உதயநிதிஸ்டாலின் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டது.

ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக முரசொலியின் அறங்காவலர் ஆர்.எஸ். பாரதி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். அந்த விசாரணையில், முரசொலி நிலம் பஞ்சமி நிலமா என்பதை நிரூபிக்க தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இந்த நிலையில், டெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், முரசொலியின் நிர்வாக அறங்காவலரான மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் 7-ம் தேதி நிலத்திற்கான உரிய ஆவணங்களுடன் டெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *