பாக். முன்னாள் அதிபர் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதிப்பு!!!

டிசம்பர்-17

பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் (76) மீதான தேசத் துரோக வழக்கில் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பு வகித்தபோது, அந்த நாட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்தாா். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்பு சட்டத்தை அவா் முடக்கினாா்.

இதன் மூலம் அவா் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அப்போதைய அரசு வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அந்த வழக்கின் தீா்ப்பு கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்தத் தீா்ப்பை நிறுத்திவைக்க இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றமும், லாகூா் உயா்நீதிமன்றமும் உத்தரவிட்டன.

இந்த நிலையில், வழக்கின் தீா்ப்பு 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. அவ்வகையில், இந்த வழக்கில் முஷாரஃப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றியடைந்து, முஷாரஃபுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையைத் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த முஷாரஃப், நாட்டை விட்டு வெளியேறி தற்போது துபையில் வசித்து வருகிறாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *