குடியுரிமை சட்டமா?? குழிபறிக்கும் சட்டமா??-ஸ்டாலின் கேள்வி

காஞ்சிபுரம், டிசம்பர்-17

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் திமுக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்: குடியுரிமை என கூறி குடிமக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியது குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா? யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என ஐநாவில் பிரதமர் பேசுகிறார் அப்படியானால் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேவையா? மாநிலங்களவையில் அதிமுக ஆதரவாக வாக்களித்ததால் தான் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேறியது. நாட்டில் கலவரம் வெடித்ததற்கு அதிமுக தான் காரணம்.

அதிமுகவின் 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேறி இருக்காது.  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வாங்கி தருவதாக கூறி தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாக மக்களவையில் அமித்ஷா தவறான தகவல் அளித்துள்ளார்.

லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது தான் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி ஆட்சியில் வழங்கப்பட்ட குடியுரிமைக்கு அமித்ஷா சொந்தம் கொண்டாட முடியாது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *