குடியுரிமை திருத்த சட்டம்: மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

டிசம்பர்-17

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை நிறைவேற்றி சட்டமாக்கிய பா.ஜ.க.வை கண்டித்தும், அதற்கு ஆதரவளித்த அதிமுகவை கண்டித்தும் தமிழகம் முழுவதும் டிசம்பர்-17-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர்.

விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் திமுக அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *