”ஒரிஜினலாவே நா வில்லன் மா” தர்பார் ட்ரெய்லரில் மாஸ் காட்டியிருக்கும் ரஜினி!!!

சென்னை, டிசம்பர்-16

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தர்பார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.  படப்பிடிப்பு முடிந்த வேளையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 7-ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று 6.30 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால், மும்பையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழா காலதாமதமானதால் 6.50 மணிக்கு மேல் தர்பார் படத்தின்ன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்த ட்ரெய்லரில் போலீஸ் ஆபீஸரா சார் அவன், கொலைகாரன் என்று ஒருவர் சொல்ல, ரஜினி ஆதித்யா அருணாச்சலம், கமிஷனர் ஆஃப் போலீஸ், மும்பை என்று ஸ்டைலாக நடந்து வந்து தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.

என்ன பார்க்கிற ஒரிஜினலாவே நான் வில்லன்மா, இது எப்படி இருக்கு என்று வசனத்தில் ரஜினி ஸ்டாலா மாஸ் காட்டியுள்ளார். மேலும் அவரின் அக்மார்க் சிரிப்புடன் ட்ரெய்லர் முடிகிறது. நீண்ட நாட்கள் கழித்து 80-களில் பார்த்த ரஜினியை பார்த்தது போல் ஒரு திருப்தி ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *