அயோத்தியில் 4 மாதத்தில் ராமர் கோவில்-அமித்ஷா

பாக்கூர், டிசம்பர்-16

அயோத்தியில் 4 மாதங்களில் வானளாவிய ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார்.

ஜார்க்கண்டில் பாக்கூர் மாவட்டத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், 4 மாதங்களில் அயோத்தியில் வானளாவிய ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்றார்.

ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பாஜக ஏன் காஷ்மீர் விவகாரத்தை பேசுகிறது என ராகுல்காந்தி விமர்சித்து வருவதாக குறிப்பிட்ட அமித்ஷா, இத்தாலிய கண்ணாடி அணிந்து பார்க்கும் ராகுல்காந்திக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீரர்களும் எல்லையில் ரத்தம் சிந்துகிறார்கள் என்பது தெரியாது என சாடினார்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதாகவும், நக்சலிசத்தை பூமிக்கடியில் குழிதோண்டி புதைத்த பிறகு, அந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மோடி அரசு பாடுபட்டு வருவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, ராமர் கோயில் அமைவதை தடுக்க காங்கிரஸ் முயற்சித்ததாகவும், வழக்குகளை நீதிமன்றங்களில் நிறுத்தியதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டினார். காங்கிரஸால் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கவோ, அல்லது குடிமக்களின் உணர்ச்சிகளை மதிக்கவோ முடியாது என்றும் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *