உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!!!

சென்னை, டிசம்பர்-16

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், கடைசி நாளான இன்று ஏராளமான அ.தி.மு.க.-தி.மு.க. வினரும், சுயேட்சைகளும் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

கடந்த 6 நாட்களில் ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 65,659 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

கடைசி நாளான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகளும் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர். மாலை 5 மணியுடன் மனுதாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *