தூத்துக்குடியா ? கொலைக்குடியா ?

*தூத்துக்குடி செப்டம்பர் 16 :

தென்மாவட்டங்களில் துறைமுக நகரமாக இருக்கும் தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்த கொலைகள் பதற்றத்தை அதிகரிக்கவே செய்கின்றன.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக திரு.அருண் பாலகோபாலன் அவர்கள்  பொறுப்பேற்ற (28.6.2019) பிறகு நடைபெற்ற தொடர்  படுகொலை நிகழ்வு விவரங்கள் என சமூக வலைதளங்களில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை இப்போது பார்க்கலாம்.

02.7.19 ● தூத்துக்குடியில்  பெண் படுகொலை. 
04.7.19 ● குளத்தூரில்  ஆணவப் இரட்டை படுகொலை. 
08.7.19 ● விளாத்திகுளத்தில்  ஆசிரியர் படுகொலை. 
10.7.19 ● தூத்துக்குடியில்  மீனவர் படுகொலை. 
13.7.19 ● தூத்துக்குடியில்  பெண் அடித்துக் கொலை. 
15.7.19 ● கயத்தாறில்  மூதாட்டி படுகொலை. 
20.7.19 ● தூத்துக்குடியில்  பார் ஊழியர் படுகொலை. 
22.7.19 ● குலையன்கரிசலில்  திமுக பிரமுகர் படுகொலை.
28.7.19 ● தூத்துக்குடியில்  இளைஞர் படுகொலை. 
31.7.19 ● தென்திருப்பேரையில்  பெண் வெட்டிக்கொலை. 
09.8.19 ● கோவில்பட்டியில்  பெண் வெட்டிக்கொலை. 
11.8.19 ● முறப்பநாட்டில்  வழக்கறிஞர் படுகொலை.
21.8.19 ● தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகே ஒருவர் படுகொலை.
27.8.19 ● தூத்துக்குடியில்  ரவுடி வெட்டிக்கொலை. 
12.9.19 ● வல்லநாட்டில் இளைஞர் படுகொலை. 
15.9.19 ● தூத்துக்குடியில் இரட்டை படுகொலை.
16.9.19 ● தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே இளைஞர் படுகொலை.

தலைகளை விட்டு விட்டு தறுதலைகளை பிடிப்பதாலும், தும்பை விட்டு துரும்பை கையில் எடுப்பதாலும் எதுவும் மாறி விடப் போவதில்லை. கஞ்சா, போதை விற்பனையாளர்களை, கூலிப்படை தலைவர்களை, ஆயுத கடத்தல் நபர்களை, செயின் பறிப்பு குற்றவாளிகளை, தொடர் திருட்டு குற்றவாளிகளை என எய்தவனை விட்டுட்டு ஏவப்பட்ட அம்பினை பெருக்கி எடுப்பதில் எந்த பலனுமில்லை என்பதை எப்போது உணர்வார்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் என்ற கேள்வி எழுகிறது..? என்று
ஆயுத எழுத்துகளுடன் அக்ரி பரமசிவன் என்பவர் பதிவிட்டதாக இந்த புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தங்களது இரும்புக்கரம் கொண்டு சமூக விரோத செயல்களை முடக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *