மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது திமுக வழக்கு!!!

சென்னை, டிசம்பர்-16

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் முறையாக வார்டு மறுவரையறைகள் செய்யப்படவில்லை, சுழற்சி முறை இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை இல்லை என கூறிவிட்டது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை திமுக தொடர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் மறு வரையறை செய்யப்படவில்லை என்றும், சுழற்சி முறையில் இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் மனுவில் முறையிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *