சாக்கடை கழிவுகளை அகற்றும் ”அதிநவீன ரோபோ”-கோவை மாநகராட்சி டிஜிட்டல் பிரச்சாரம்

கோவை, டிசம்பர்-16

தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சியான கோவையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் மற்றோரு சீரிய முயற்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அறிவுறுத்தலின்படி, குப்பையில்லா நகரம், என்ற இலக்கை நோக்கி கோவை மாநகராட்சி பல்வேறு    சீரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. மேலும், கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம்பிரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றை மையமாக கொண்டு மாநகராட்சி சார்பில் டிஜிட்டல் பிரச்சாரமும் செய்து வருகிறது.

இந்த நிலையில் மனிதக்கழிவுகளை மனிதர்களை கொண்டு அகற்றுவதற்கு மாற்றாக கோவை மாநகராட்சியில் முதன்முதலாக பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றும் அதி நவீன கிளினிங் ரோபோ எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. 

பாதாளச் சாக்கடை மற்றும் கழிவு நீர் வடிகால் குழாய்களில் ஏற்படும் அடைப்பை அகற்றும் வகையில், இந்த அதிநவீன ரோபோ எந்திரத்தை 36 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் முதல்முறையாக கிளினிங் ரோபோ அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் அதிநவீன ரோபோவின் செயல்பாடுகளை விளக்கி டிஜிட்டல் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் முறையாக அந்த அதிநவீன ரோபோவை பயன்படுத்திக்கொண்டு, மாநகராட்சியின் சுத்தம், சுற்றுப்புறத்தூய்மை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *