குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் வருத்தமளிக்கிறது-மோடி

டெல்லி, டிசம்பர்-16

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டம் துரதிர்ஷ்டவசமானவை என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: விவாத‌மும், பேச்சுவார்த்தையும் ஜனநாயகத்தின் அங்கம், ஆனால் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது பண்பாடு அல்ல.

குடியுரிமை சட்ட திருத்தம் இந்தியர்கள் யாரையும் பாதிக்காது. பல ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாதவர்கள் நலனுக்காகவே சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும்.

சிறுபான்மை மக்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்காக உழைக்க வேண்டிய நேரம் இது. நம் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் குழுக்களை நாம் அனுமதிக்க கூடாது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டம் கவலையளிப்பதாகவும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில் நடைபெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *