ஸ்டாலின் காந்தியும் இல்லை…நான் புத்தனும் இல்லை-சி.வி.சண்முகம்

சென்னை, டிசம்பர்-16

என்னைப் பற்றி விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியும், தராதரமும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தலாம் என தெளிவாக தீர்ப்பை வழங்கியுள்ளது.

தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் திமுக தலைவர் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தேர்தலை நிறுத்த வேண்டும் சீற்குலைக்கும் வகையில் திமுக தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தி வருகிறது. திமுக தலைவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். முதல்வர் கனவில் உள்ள ஸ்டாலின் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். என்னை பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதியும் தராதரமும் கிடையாது. அவர் ஒன்றும் காந்தியும் இல்லை நான் புத்தனும் இல்லை. என்னை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. மீறி விமர்சிக்க வேண்டும் என்றால் தனியாக மேடை போட்டு விமர்சிக்க தயார். நான் தமிழக குடிமகன். ஆனால் அவர் யார், அவர் பூர்வீகம் என்ன என்று சொல்ல தயாரா?? என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *