குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு!!!

டெல்லி, டிசம்பர்-16

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்து உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றி உள்ளது.

இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் மேற்கு வங்காளத்திலும் பரவியது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுக்கும் அதே  சமயத்தில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்  சார்ப்பில்  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கடசிகள் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *