சமந்தாவின் அரைகுறை புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி – டென்ஷனான ரசிகர்கள்

தனது முகநூல் பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் சமந்தாவின் புகைப்படத்தையும் தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள ஸ்ரீரெட்டி, சமந்தா பெரிய நடிகையாக இருக்கலாம் ஆனால் எங்கள் இருவரில் யார் கவர்ச்சி? என்று கேள்வி எழுப்பி உள்ளார். சமந்தாவை விட தனது தோற்றம் கவர்ச்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை, செப்-15

தெலுங்கு திரைப்பட உலகில் சில காலங்களுக்கு முன்னர்,பிரபல ஹீரோக்கள் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ-ரெட்டி. இதற்காக அரைநிர்வாண போராட்டமும் நடத்தினார். இதையடுத்து, தமிழில் ராகவா லாரன்ஸ் உட்பட பல்வேறு ஹீரோக்கள் மீதும் பாலியல் புகார் சுமத்தினார். இதன்பிறகு, ராகவா லாரன்ஸ் தன்னுடைய படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறியதும், அப்படியே பல்டி அடித்து, லாரன்சை புகழ்ந்து தள்ளினார். பின்னர் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறி சென்னையில் குடியேறினார். அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது.

எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஸ்ரீ-ரெட்டி தற்போது, நடிகை சமந்தாவை வம்பிழுத்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில், சமந்தாவின் புகைப்படத்தையும், தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டு, இதில் யார் மிகவும் கவர்ச்சியாக உள்ளனர் என்று ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் டென்ஷனாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *