குடியுரிமை சட்டத்திருத்தம்: இலங்கை தமிழர்களை ஒதுக்க காரணம் என்ன? –ப.சிதம்பரம்

டெல்லி, டிசம்பர்-16

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு அதிமுக ஆதரவளித்திருப்பது கேலிக்குரியது என்றும், இதில் இலங்கை தமிழர்களை ஒதுக்க காரணம் என்ன என மத்திய முன்னாள் நிதியமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதவது: குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை ஆதரித்ததற்கு அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ள காரணம் கவலைக்குரியது, கேலிக்குரியது தலமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைக்குனிவு!!!

‘இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள’ என்ற கேள்விக்கு என்ன பதில்? இலங்கைத் தமிழர்கள் என்றல்லவா அவர்களைப் பார்க்க வேண்டும்? அவர்களில் பெரும்பான்மையானவர் இத்துக்கள் என்பதை அரசு மறந்துவிட்டதா? இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *