ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிப்பு!!!

ஸ்ரீநகர், டிசம்பர்-14

பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆக. 5ல் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனையடுத்து, பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் ஒமர் அப்துல்லா, பிடிபி கட்சியின் மெகபூபா முப்தி மற்றும் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணையின்றி 2 ஆண்டுகள் சிறையில் வைக்க முடியும். இந்நிலையில், பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *