16-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் தர்பார் படத்தின் டிரெய்லர்!!!

சென்னை, டிசம்பர்-14

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் ட்ரெய்லர் வருகிற 16-ம் தேதி வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 7-ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதையடுத்து, தர்பார் படத்தின் ட்ரெய்லர் ரஜினியின் பிறந்தநாளான 12-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வருகிற 16-ம் தேதி (திங்கள் கிழமை) தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. ரஜினி இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதால் ட்ரெய்லர் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *