உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!!

சென்னை, டிசம்பர்-14

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள பகுதிகளின் விவரங்களை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்திய, சேலம் மேற்கு, கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமூக முடிவெடுக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. மற்ற பகுதிகளுக்கும் விரைந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் திமுக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *