காப்பான் படத்தின் 2வது ட்ரைலர் வெளியீடு

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை, செப்-15

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி உள்ளிட்டோர் நடித்துள்ள காப்பான் படம் வரும் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. காப்பான் படத்துக்கு இசை – ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பு – லைகா நிறுவனம்.

இப்படத்தின் டிரெய்லர் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த டிரெய்லர் குறித்து சமூகவலைத்தளங்களில் இரு விதமாகவும் கருத்துகள் வெளியாகின. ஒரு தரப்பினர் நல்ல ஆக்‌ஷன் படமாக இருக்கப்போகிறது என்று கருத்து தெரிவித்தார்கள். அதேசமயம் எதிர்மறையான கருத்துகளும் வெளிவந்தன. டிரெய்லர் இன்னும் கூடுதல் சுவாரசியத்துடன் அமைந்திருக்கலாம். கடந்த 4ம் தேதி வெளியான ட்ரெய்லரை பார்த்து சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலர் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *