கமல்ஹாசனை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரிய ராகவா லாரன்ஸ்!!!

சென்னை, டிசம்பர்-14

கடந்த 7-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் ரஜினியின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், பேசிய நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தாம் சின்ன வயதில் கமல்ஹாசன் போஸ்டரில் சாணி அடித்ததாகவும், ஆனால், தற்போது ரஜினியும், கமலும் இந்த அளவுக்கு ஒற்றுமையாக இருப்பார்கள் என நினைக்கவில்லை என்றும் கூறினார். இது கமல்ஹாசன் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தம்முடைய டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ள ராகவா லாரன்ஸ்: தாம் கூறிய கருத்து திரிக்கப்பட்டு கூறப்படுவதாகவும், அதற்கு கமல்ஹாசனை சந்தித்து மன்னிப்பு கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளார். என்னுடைய விளக்கத்தை ஏற்று வழியனுப்பி வைத்த கமல்ஹாசனுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *