இணையத்தில் வெளியானது ஜெயலலிதா பயோபிக் “குயின்”

சென்னை, டிசம்பர்-14

கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடர் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே எம்.எக்ஸ். பிளேயரில் வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மையப்படுத்தி அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து இணையதள தொடரை இயக்கியுள்ளாா்கள், கெளதம் மேனன். இதில், பிரசாந்த் முருகேசன், அனிகா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கூறும் குயின் தொடர் இணையத்தில் வெளியானது. இந்த இணையத் தொடரை மும்பையைச் சோ்ந்த எம்எக்ஸ் பிளேயா் நிறுவனம் இணையதளத்தில் முழுவதுமாக வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *