சென்னை மாநகராட்சி பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை பாடத்திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை, டிசம்பர்-14

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தினமும் 4930 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவை மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் மட்கும் குப்பைகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது.

பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் உரங்களை வாங்க சென்னை மாநகராட்சி இணையதள சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பாடம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படவிருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கல்வி பயிற்றுவிக்கும் முயற்சியில் ‘டிராஷோனாமிக்ஸ்’ என்கிற புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் முதல்கட்டமாக 50 மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 281 சென்னை பள்ளிகளுக்கும் இந்த பாடத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். மாணவர்கள் இப்பாடத்திட்டத்தின் வாயிலாக சுத்தத்தின் அவசியத்தையும் திடக்கழிவு மேலாண்மை குறித்த முக்கியத்துவத்தையும் கற்று வாழ்வில் பயன்பெறுவர் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *