பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை, செப்-15

திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றார். அப்போது அவருக்கு திமுக சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதை அடுத்து அண்ணாவின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல, ஏராளமான திமுகவினரும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *