”ரேப் இன் இந்தியா” பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்-பா.ஜ.க. பெண் எம்.பி. க்கள்

டெல்லி, டிசம்பர்-13

ரேப் இன் இந்தியா என்று ராகுல் காந்தி பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்மிருதி ராணி உள்ளிட்ட பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ராகுல் பேசும் போது, ‘மேக் இன் இந்தியா’ குறித்து மோடி பேசி வருகிறார். ஆனால், எங்கு பார்த்தாலும், ‘ ரேப் இன் இந்தியா’ ஆக உள்ளது. உ.பி.,யில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்தார். ஆனால், அது குறித்து மோடி பேசுவது கிடையாது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மக்களவை கூடியதும், பா.ஜ.க. பெண் எம்.பி. க்கள் ராகுலுக்கு எதிராக கோஷம் போட்டு அமளியில் ஈடுபட்டனர்.அப்போது, பேசிய ஸ்மிருதி இரானி, வரலாற்றில் முதல்முறையாக, தலைவர் ஒருவர், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார். இது தான் நாட்டு மக்களுக்கு ராகுல் சொல்லும் செய்தியா? அவரை தண்டிக்க வேண்டும். அனைத்து ஆண்களும், பலாத்காரம் செய்பவர்கள் இல்லை. ராகுலின் பேச்சு இந்தியாவுக்கு அவமானம். அவருக்கு 50 வயதாக போகிறது. அவரின் இந்த கருத்தை பலாத்காரத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது என்பது அவருக்கு தெரியவில்லை என்றார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலஹாத் ஜோஷி கூறுகையில், ராகுல், அவரது பேச்சின் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றார்.

அமளிகளுக்கு இடையே திமுக எம்.பி., கனிமொழி பேசும் போது, ”மேக் இன் இந்தியா” என்ற பிரதமரின் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? இதனை தான் ராகுல் கூறியுள்ளார். ஆனால், மேக் இன் இந்தியா வரவில்லை. நாட்டில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இது கவலைக்குரிய விஷயம். இவ்வாறு அவர் பேசினார். இதே போல், ராஜ்யசபாவிலும் பா.ஜ.க. எம்.பி. க்கள் ராகுலுக்கு எதிராக கோஷம் போட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *