என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி-ரஜினி

சென்னை, டிசம்பர்-13

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 70-வது பிறந்ததினத்தை நேற்று டிசம்பர்-12ம் தேதி கொண்டாடினார். இதையொட்டி, திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி, என் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி என்னை வாழ்த்திய வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும், என்னை நெஞ்சார வாழ்த்திய தமிழக மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், மற்றும் பல துறையிலிருக்கும் அன்பர்களுக்கும், பத்திரிகை, ஊடக மற்றும் தொலைக்காட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த நண்பர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *