அயோத்தி தீர்ப்புக்கு எதிரான 18 சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

டெல்லி, டிசம்பர்-12

நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 9-11-2019 அன்று தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது, மசூதி கட்ட வக்பு வாரியம் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதற்கிடையில், அயோத்தி தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி சில அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 18 சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்,இந்த சீராய்வு மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  இதில் அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *