மறைந்த சன் டிவி ஒளிப்பதிவாளர் செந்தில் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்

சென்னை, டிசம்பர்-12

சன் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளரான செந்தில்குமார் உயர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி காலமானார். இவர், சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவால் அண்மையில் செந்தில் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செந்திலின் மனைவி வசந்தி மற்றும் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *