குயின், தலைவி படங்களுக்கு தடையில்லை-உயர்நீதிமன்றம்

சென்னை, டிசம்பர்-12

தலைவி படத்திற்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரிலும் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். மேலும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் கௌதம் மேனன் இணையதள் தொடராகவும் தயாரித்து வருகிறார். இவற்றிற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், இந்த படங்களில் தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தை பற்றியோ தவறாக சித்தரிக்க வாய்ப்பிருப்பதாக கூறி தடை கோரினார். ஆனால், இந்த வழக்கு விசாரணையின் போது குயின் மற்றும் தலைவி படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. தீபா கதாப்பாத்திரம் குயின் படத்தில் இடம்பெறவில்லையென்ற கௌதம் மேனன் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அதேபோல, ஏற்கனவே வெளிவந்த புத்தகங்களின் அடிப்படையிலேயே தலைவி படம் எடுக்கப்படுவதாக இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் படத்திற்கு தடை விதிக்க மறுத்து, தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *