குடியுரிமை மசோதா குறித்து தவறான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் பரப்புகிறார்கள்-மோடி

தன்பத், டிசம்பர்-12

வடகிழக்கு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டுகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 3வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்று வரும் வேளையில், 4வது கட்ட தேர்தலுக்காக தன்பத் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், காங். அறிக்கையை நம்பி வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் தவறான வழிக்கு செல்ல வேண்டாம். குடியுரிமை மசோதா விவகாரத்தில் வடகிழக்கு மாநில மக்களிடையே பதட்டத்தை தூண்ட முயற்சி செய்கிறது. அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் மரபுகள், கலாசாரம், மொழி போன்றவை பாதிக்கப்படாது.

அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதாக மோடி குற்றம் சாடினார். பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு நிவாரணம் தருவதாக கூறிய காங். எதையும் செய்யவில்லை.

காங்., அரசு அவர்களை எப்படி நடத்தியதோ, அதே கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தான் அவர்கள் பாக்., உள்ளிட்ட நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவே குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார். பாகிஸ்தானில் இருந்த வாழ்க்கை நிலையையே காங். அரசுகள் அகதிகளுக்கு வழங்கியது என கூறினார்.

மேலும் பேசிய அவர், மிக நீண்ட காலமாக இருந்து வந்த அயோத்தி பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என நாங்கள் வாக்குறுதி அளித்தோம். காங்., அதற்கு முட்டுக்கட்டை போட்டது. தற்போது அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதை நீங்கள் காண்கிறீர்கள். அதே வழியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *