உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறோம்- லதா ரஜினிகாந்த்

சென்னை, டிசம்பர்-12

நடிகர் ரஜினிகாந்த் சார்பாக ரசிகர்கள் அனைவரது அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு லதா ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் குவிந்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், ‘நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சார்பாக ரசிகர்கள் உங்களது அனைவரின் அன்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களது குடும்பத்தினர் சார்பாக உங்கள் அனைவரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களது குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். பலர் மிகவும் கஷ்டப்பட்டு நீண்ட தூரம் பயணம் செய்து இங்கு வந்துள்ளீர்கள். உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறோம்’ என்று தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *