அசாம் மக்கள் கவலைப்படவேண்டாம்: மோடி வேண்டுகோள்

டெல்லி, டிசம்பர்-12

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்ள, நீதிமன்றத்திலும் ஒரு சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மசோதா குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து அசாமில் உள்ள சகோதர, சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என உறுதி அளிக்கிறேன். உங்களின் உரிமைகள், தனிப்பட்ட அடையாளம், அழகிய கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் பறிக்க முடியாது. அது உங்களின் வளம் மற்றும் வளர்ச்சியை தொடர செய்யும்.

பிரிவு 6 அடிப்படையில் அசாம் மக்களின் அரசியல், மொழியியல், கலாச்சார மற்றும் நில உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படையில் பாதுகாக்க நானும் மத்திய அரசும் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *