ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு!!!

ராஞ்சி, டிசம்பர்-12

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஒட்டுப்பதிவு முடிந்து விட்டது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு   மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உள்பட 309 பேர் போட்டியிடுகிறார்கள். 56.18 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கிறார்கள். இதற்காக 7016 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான ஜெயந்த் சின்கா ஹசாரிபாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *