உள்ளாட்சி தேர்தல்: மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு

சென்னை, டிசம்பர்-11

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு முறைப்படி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலூர் மாநகராட்சி பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி பட்டியலினத்தவர்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 மாநகராட்சி மேயர் பதவிகளில் 9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, ஆவடி, கோவை, திருப்பூர், தஞ்சை, சேலம், ஓசூர் ஆகிய மாநகராட்சி மேயர்பதவிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *