மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று கூறிய மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

டெல்லி, செப்-14

பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும், தொழிற்துறை உற்பத்தி மீட்சி அடைவதற்கான அறிகுறிகள் தெளிவாகவே தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக 4 சதவீதத்திற்குள் வைக்கப்பட்டிருப்பது, பொருளாதாரம் ஆரோக்கியமாக இருப்பதையே காட்டுவதாக நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். அன்னிய நேரடி முதலீடுகளின் வரத்து திடமாக இருப்பதாகவும், அன்னிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட்டில் உயர்ந்திருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் ;-

 • நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதை காட்டுகிறது.
 • நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகின்றன.
 • நாட்டின் பணவீக்க விகிதம் 4 சதவீதத்துக்கு கீழ் உள்ளது. நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பும் போதுமான அளவு உள்ளது. 5 முக்கிய துறைகளில் பொருட்கள்நுகர்வு குறைந்து விட்டது. செப்டம்பர் 19-ம் தேதி பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
 • நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 • வரி செலுத்தும் முறையில் சிறிய தவறுகள் ஏற்பட்டால் அதற்கான தண்டனை ஏதும் வழங்கப்படாது.
 • நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி மூலம் ரூ.68,000 கோடி கடன் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 • வங்கியில் கடன் வாங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும்.
 • நாட்டின் ஏற்றுமதியை கண்காணிக்க குழு அமைக்கப்படும்.
 • கூடுதலாக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியை திரும்ப வழங்கும் முறை மின்னணு மயமாக்கப்படும்.
 • நாட்டின் ஏற்றுமதி வரியில் இதுவரை நடைமுறையில் உள்ள சுங்க வரியை 2020 ஜனவரி 1 முதல் நீக்குவதாக அறிவித்துள்ளார்.
 • சுங்க வரி நீக்குவதால் ஜவுளி வியாபாரிகள் பெரியளவில் பயனடைவார்கள். 2020 ஜனவரி 1 முதல் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். புதிய திட்டத்தால் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
 • துபாயில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஷாப்பிங் திருவிழா போல் இந்தியாவிலும் மார்ச் மாதம் நடத்தப்படும். ஜவுளி, தோல், சுற்றுலா, யோகா தொடர்பாக ஷாப்பிங் திருவிழா அமையும்.
 • கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்ய நாடு முழுவதும் கைவினைஞர்கள் பெயர் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *