அசாம், திரிபுராவில் தீவிரமடைந்த போராட்டம்: ராணுவம் குவிப்பு!!!

டிசம்பர்-11

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து திரிபுரா, அசாமிற்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகங்களின் கோரிக்கையை ஏற்று, திரிபுராவின் கன்ச்சன்பூர் மற்றும் மனு மாவட்டங்களிலும், அசாமின் போன்கைகோன் மாவட்டத்திலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், இரண்டு அதிகாரிகள் தலைமையில் 70 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அசாமின் திப்ருகார்க் மாவட்டத்தில் அதி விரைவுப்படையினர் தயார் நிலையில் இருக்க, வடகிழக்கு மாநிலங்களில் 5 ஆயிரம் துணை ராணுவப்படையினர் தயாராக உள்ளனர்.

அசாமின் திஸ்புர் மாவட்டத்தில், குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ்சை தீவைத்து எரித்தனர். அங்கு போராட்டம் காரணமாக திரிபுராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள மற்றும் குறுஞ்செய்தி சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அசாமில் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாளை காலை 7 மணி வரை இணையதள சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் மாலை முதல், அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *