”வாய்ச் சொல்லில் வீரர்” ஸ்டாலின் -ஜெயக்குமார் கிண்டல்

சென்னை, டிசம்பர்-11

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்த நாளை முன்னிட்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், குடியுரிமை குறித்து அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசிவிட்டார். எனவே இதனால் சிறுபான்மையினர் ஒருபோதும் 0.01 சதவீதம் கூட பாதிப்பு ஏற்படாது.

அதேபோல் இங்குள்ளவர்கள் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்கின்றனர். ஏற்கனவே ஜெயலலிதா தெரிவித்தது போன்று, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மீண்டும் வலியுறுத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அதிமுகவின் நிலை எப்போதும் மாறாது. தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். ஆனால் தேர்தல் நடைபெறாமல் இருக்க அனைத்து வழிகளையும் திமுக செய்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

குற்றம் நடந்தால் அந்த குற்றத்திற்காக உடனடியாக தண்டனை வாங்கித் தருவது அரசின் கடமை. அதேபோல் அதை மீறி குற்றம் நடைபெற்றால் அதற்கான தண்டனை நிச்சயமாக வாங்கி தரப்படும். இந்தியாவிலேயே பெண்கள் சுதந்திரமாக தமிழ்நாட்டிலும் சென்னை தான் பாதுகாப்பான இடம்.

உள்ளாட்சித் தேர்தல் பதவிகளுக்கு ஏலம் விடப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் பதவிகளை ஏலம் விடுபவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே… வாய்ச் சொல்லில் வீரரடி… என்று பாரதியார் கூறுவார். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிச்சயம் பொருந்தும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *