வேட்டி, சேலையில் நோபல் பரிசை பெற்றுக்கொண்ட அபிஜித் பானர்ஜி, எஸ்தர் தம்பதி!!!

ஸ்டாக்கோம், டிசம்பர்-11

இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ ஆகியோர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையில் தங்களது நோபல் பரிசை பெற்றுக் கொண்டனர்.

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்த மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த பரிசு வழங்கும் விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. அப்போது அபிஜித் பானர்ஜி வேட்டி அணிந்தும், அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ சேலை அணிந்தும் நோபல் பரிசை பெற்றுக் கொண்டனர்.

அபிஜித் பானர்ஜி மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் குடியேறி அந்நாடின் குடியுரிமை பெற்றுள்ளார். அத்துடன் மிகவும் குறைந்த வயதில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அறிவிக்கப்பட்டவர் என்ற பெருமையை எஸ்தர் டஃப்லோ பெற்றுள்ளார். அவருக்கு வயது 46. அபிஜித் பானர்ஜியும், எஸ்தர் டஃப்லோவும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *