தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செப்-14

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு ஊர்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருவாரூர், திருவள்ளூர்,காஞ்சிபுரம்,நாகப்பட்டினம், கரூர், நீலகிரி, நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தர்மபுரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடுமென கூறப்பட்டுள்ளது.

இந்த மழை வருகிற 18-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அன்று வரை ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று மாலை அல்லது இரவில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *