திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகரம் “கோவை”

கோவை, டிசம்பர்-10

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக கோவை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சியான கோவையில் மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குப்பையில்லா நகரமாக்குதல், கொசுக்கள் ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட தூய்மை பணிகளில் ஏற்கனவே கோவை மாநகராட்சி சிறந்து விளங்குகிறது.

இதற்கு மத்திய அரசின் பல விருதுகளையும் கோவை மாநகராட்சி பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக கோவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய தரக்கட்டுப்பாட்டு கவுன்சிலும் உறுதிபடுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம்பிரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், கொசு ஒழிப்பு ஆகியவைகளை மையமாக கொண்டு டிஜிட்டல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரம் என்ற அந்தஸ்த்தையும் கோவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *