இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும்-ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

டெல்லி, டிசம்பர்-10

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் டுவிட்டர் பதிவில்: இந்தியாவில் 35 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *