திருவண்ணாமலையில் இன்று மாலை கார்த்திகை மகா தீபம்

திருவண்ணாமலை. டிசம்பர்.10

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான கார்த்திகை  தீபத்திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி,திருவண்ணாமலையில்  இன்று மாலை 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில்  கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்களாக நடைபெறும் விழாவில், ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 7ம் தேதி நடைபெற்றது.

 இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அண்ணாமலையார் கருவைறை முன்பு பரணி தீபம் ஏற்றும்  நிகழ்வு நடைபெற்றது. இதற்காக நள்ளிரவு முதலே அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கங்களை எழுப்பி வழிப்பட்டனர். 

இதனைத்தொடர்ந்து விழாவான சிகர நிகழ்ச்சியாக, இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.  

கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக வரும் பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் வெளி ஊர்களில் இருந்து வர 2,600 சிறப்புப் பேருந்துகளும், திருவண்ணாமலை விழுப்புரம் தடத்தில் 22 சிறப்பு ரயில்களும் இயக்கபடுகிறது.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *