சுத்தம், சுற்றுப்புற மேன்மை, தொழில்நுட்பத்தில் நம்ம கோவை ஸ்மார்ட்-மாநகராட்சி பெருமிதம்

கோவை, டிசம்பர்-09

ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தை வலியுறுத்தி கோவை மாநகராட்சி தீவிர டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சியான கோவையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் மற்றோரு சீரிய முயற்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரித்தல், குப்பைத்தொட்டியில்லாத நகரமாக்குதல், சாலைபாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகளில் சிறந்துவிளங்கிட ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தோடு டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுத்தம், சுற்றுப்புற மேன்மை, தொழில்நுட்பம், வாழ்க்கைச் சூழலில் சிறந்து விளங்கிட ஸ்மார்ட்டாக யோசித்து சிறப்பாக செயல்படுத்துவோம் என டிஜிட்டல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பல்வேறு திட்டங்களில் முதலிடம் பெற்றுள்ள கோவை மாநகராட்சி சுத்தம், சுற்றுப்புற மேன்மை, தொழில்நுட்பம், வாழ்க்கைச் சூழலிலும் ஸ்மார்ட்டாக இருப்பதாக மாநகராட்சி சார்பில் பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *