கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

 சென்னை .டிசம்பர்.9

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக  பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகள், ராமநாதபுரம்,தென்காசி,குமரி,நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்கள், கட லோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.  சென்னை,திருவள்ளுர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழைபெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 12 விழுக்காடு அளவுக்கு கூடுதலாக  வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நாளை இடியுடன் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதளில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் நிலவும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி எந்த பகுதிகளிலும் மழை பெய்யவில்லை என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  கடந்த 01.12.2019 முதல் இன்று 09.12.2019 வரை பதிவாகி உள்ள மழை அளவு விவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *