கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தது எடியூரப்பாவின் பா.ஜ.க. அரசு!!!

பெங்களூரு, டிசம்பர்-09

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்களும் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டனர்.  இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இதன்பிறகு, கர்நாடக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 17 இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்தது.  இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.  இதில், பாஜக 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 2 இடங்களிலும், மஜத ஒரு இடத்திலும் முன்னிலையில் இருந்தன.  

கர்நாடகத்தில் தற்போது பதவியில் இருக்கும் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி தொடர 6 தொகுதிகளில், வெற்றி பெறுவது அவசியம் ஆகும். இந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6-க்கும் அதிகமான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியதன் மூலம் எடியூரப்பா தனது ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *