கோவை-அவினாசி சாலையில் அமையவிருக்கும் உயர்மட்ட பாலத்திற்கு முதல்வர் ஒப்புதல்!!!

கோவை, டிசம்பர்-07

கோவை-அவிநாசி சாலையில் 9.5 கி.மீ தூரத்திற்கு அமையவிருக்கும் உயர்மட்ட பாலத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மாநகரின் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக கோவை-அவினாசி சாலையில் 9.5. கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.950 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், தற்போது முதலமைச்சர் பழனிசாமியும் இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக 170 இடங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டு, உத்தேச வரைபட தயாரிப்பு பணி முடிவடையவுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

உயர்மட்ட மேம்பாலத்தின் சிறப்புகள்:

இந்த சாலை உப்பிலிபாளையம் தண்டுமாரியம்மன் கோவில் அருகே துவங்கி, சிட்ரா (தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகம்) விமான நிலைய சாலை சந்திப்பை கடந்து, சின்னியம்பாளையம் அருகில் முடிவடைகிறது. இது, நான்கு வழிச்சாலையாக அமையவுள்ளது. இரண்டு இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்படவுள்ளன. காந்திபுரம் மேம்பாலம் போல் அல்லாமல் மக்கள் வசதிக்காக முக்கிய இடங்களில் இறங்குதளம், ஏறுதளம் அமைக்கப்படுவதுதான் இந்த உயர்மட்ட பாலத்தின் கூடுதல் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *