ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 7வது முறையாக இந்திய அணி சாம்பியன்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது.

செப்-14

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இலங்கையில் நடைபெற்றது. இதில் இந்தியா – வங்கதேச அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதற்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் அதிக பட்சமாக கரண் லால் 37 ரன்களும் கேப்டன் துருவ் 33 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் அதர்வா 5 விக்கெட்டுகளும் ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளும் மிஸ்ரா, பட்டில் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக அதர்வா தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக இந்திய அணியின் அர்ஜூன் அசாத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து 7-வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி தட்டி சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *